பிரபல நடிகரின் 2 வங்கிக்கணக்குகள் முடக்கம்: ஜி.எஸ்.டி. ஆணைய அதிகாரிகள் அதிரடி

மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு சட்டத்தின்கீழ் நடிகர்களும், தொழில் செய்பவர்களாக கருதப்படுகிறார்கள்.

எனவே அவர்கள் சேவை வரி செலுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சேவை வரி செலுத்தாமல் இருந்தார். 2007-08ம் ஆண்டில் அவர் ரூ.18.5 லட்சம் சேவை வரிபாக்கிவைத்துள்ளார்.

சேவை வரி செலுத்தும்படி அவருக்கு ஜி.எஸ்.டி. ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியபடி இருந்தது. ஆனால் நோட்டீசுகளுக்கு நடிகர் மகேஷ்பாபு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.டி. ஆணையரக அதிகாரிகள் நேற்று அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நடிகர் மகேஷ்பாபுவின் 2 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவற்றில் உள்ள அந்த 2 கணக்குகளிலும் ரூ.73.5 லட்சம் பணத்தை நடிகர் மகேஷ்பாபு சேமித்து வைத்து இருந்தார். அந்த பணத்தில் இருந்து சேவை வரிக்கான தொகை மற்றும் வட்டியை வசூலிக்க ஜி.எஸ்.டி. ஆணையரகம் முடிவு செய்து உள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.