சிம்புவை தெரிவு செய்த சீமான்!

நடிகர் சிம்புவின் கரியர் கிராஃப் மீண்டும் ஏறத் தொடங்கியுள்ளது. ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்துக்குப் பிறகு ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொலிட்டிகல் காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இது உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இயக்குநராக இருந்து அரசியல்வாதியான சீமான் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பெயரிடப்படாத இந்தப் படத்தில் சிம்பு மருத்துவராக நடிக்கிறாராம். சமூகத்தின் இன்றைய நிகழ்வுகளை களமாகக் கொண்டு இப்படத்தை இயக்குகி வருகிறாராம் சீமான். படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.