மீண்டும் ராசியில்லாதவர் என்று பெயர் பெற்ற நடிகை!


தமிழில் அறிமுகமாகி நடித்த இரண்டு படங்களும் படு ஃப்ளாப் ஆனதால் ராசியில்லாத நடிகை என்று பெயர் பெற்றாராம் சிங் நடிகை. ஆனால் பக்கத்து தேசத்தில் தொடர்ந்து ஹிட்களாக கொடுத்து முன்னணி ஹீரோயின் ஆனாராம். அங்கே எல்லா பெரிய ஹீரோக்களுடனும் நடித்தவர் தமிழில் விட்டதை பிடிக்க சிலந்தி படம் மூலம் ரீ எண்ட்ரி ஆனாராம். ஆனால் அந்த படம் தோல்வியைத் தழுவியதாம்.

தெலுங்கில் நடிகைக்கு இருக்கும் மார்க்கெட்டை பயன்படுத்திக்கொள்ள நினைத்து அவருடன் ஜோடி போட ஆசைப்பட்ட பெரிய ஹீரோக்கள் இப்போது பின்வாங்குகிறார்களாம். தளபதி நடிகர் படத்தில் நடிகை நடிப்பது சந்தேகம்தானாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!