ஜீலியால் மட்டும் தான் இப்படியெல்லாம் பொய் சொல்ல முடியும்:வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!!

பிக் பாஸ் வீட்டில் ஜூலி சொன்ன ஒரு பொய் பலரும் அவரை வெறுக்க காரணமாகிவிட்டது. அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு ஜூலி பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.


அப்படி அவர் அளித்த ஒரு பேட்டியில் ஹரிஷ் கல்யாணுடன் அடிக்கடி போனில் பேசுவதாகவும் இருவரும் இருவரின் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்வதாகவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.


அந்த பேட்டியை பார்த்தமும் ஹரிஷ் கல்யாண் கடுப்பாகி உள்ளார்.அதற்கு தற்போது மறுப்பு தெரிவித்துள்ள ஹரிஷ் கல்யாண், “ஜூலி சொன்னது பொய். அவர் எனக்கு ஒரே ஒரு முறை தான் போன் செய்தார்.


அப்போது கூட இன்டர்வியூ பற்றி தான் பேசினார். வேறு எதுவும் பேசவில்லை” ஏன் இப்படி மறுபடி பொய் சொல்கிறார் என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ஜூலியை மீண்டும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!