நீங்க பப்ளிசிட்டியாகதான் தல தளபதி கிடைத்தார்களா? அண்மைக்கால ட்ரெண்ட்!!!


தமிழ் சினிமாவில் இரண்டு நடிகர்கள் மோதல் என்பது இன்று தொடங்கியது இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நடிகர்களை விடுங்கள் புராணங்களிலேயே இரண்டு தரப்பு மோதல் என்பது எப்போதுமே இருந்து வருகின்றது.

இவை காலத்திற்கு ஏற்றார் போல் மாறுப்படும், எம்.ஜி.ஆர்-சிவாஜி மோதல் திரையரங்கில் நடந்தால் ரஜினி-கமல் மோதல் பேனர், போஸ்டரில் ஆரம்பித்தது.


ஆனால், இதையெல்லாம் விட மிகப்பெரிய வைரஸ் தற்போது சமூக வலைத்தள மோதல் தான், ஏனெனில் உங்கள் முகம் தெரியாது, எங்கு இருக்கின்றீர்கள் என்றும் தெரியாது.

அதனால், யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மோசமாக நீங்கள் திட்டலாம், அதற்கு தற்போது மிகப்பெரும் கருவியாக இருப்பது விஜய்-அஜித் தான்.

இவர்கள் ரசிகர்களின் மோதல் நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை, இதில் சிறப்பம்சம் என்னவென்றால் ரசிகர்கள் சண்டை, ரசிகர்களுடன் முடிந்துவிட்டால் பிரச்சனையில்லை.


ஆனால், இதில் சில பிரபலங்களும் குளிர் காய்வது தான் வேதனை, ஒரு நடிகரின் ரசிகர் என்று தன்னை காட்டிக்கொள்ளும் பிரபலங்கள் அதை தங்கள் படத்தின் ப்ரோமோஷனுக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.

அதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அந்த நடிகருக்காக எதிர் தரப்பை ஏதோ குழாயடி சண்டைப்போல் இறங்கி சண்டைப்போடுகின்றனர், இதனால், ரசிகர்கள் மோதல் இன்னும் அதிகமாகிக்கொண்டே தான் போகின்றது.

இதற்கு ஜி.வி.பிரகாஷில் ஆரம்பித்து பிக்பாஸ் புகழ் ஆர்த்தி வரை ஓர் உதாரணம், இவர்கள் எல்லோருமே ஏதோ தங்கள் பேவரட் நடிகர்களுக்கு சப்போர்ட் செய்கின்றேன் என்ற பெயரில் ரசிகர்கள் சண்டையை தான் உருவாக்குகின்றனர்.

இதுபோதாது என்றால் ஒரு சில ஊடகங்களை சேர்ந்தவர்களும் தங்கள் விளம்பரங்களுக்கு இவர்களை பயன்படுத்திக்கொள்கின்றனர், ஒரு படம் வந்தால் தங்களுக்கு பிடித்த நடிகர் என்றால் இரண்டே நாளில் ரூ 100 கோடி என்பார்கள்.


எதிர் தரப்பு நடிகர்களின் படத்தை மட்டம் தட்டி பேசுவார்கள், ஒரு சில நாட்களுக்கு முன் விஜய் படத்தை கிண்டல் செய்த ஒரு பெண்ணை ரசிகர்கள் சூழ்ந்துக்கொண்டு திட்ட, அதன் பின் நடந்தது எல்லாம் அனைவரும் அறிந்தது தான்.


அதேபோல் தற்போது ஒரு பெண் அஜித் குறித்து பேசி யாருமே கண்டுக்கொள்ளவில்லை, பிறகு அவராகவே நீண்ட அறிக்கை ஒன்றை விடுகின்றார் என்னை திட்டுகிறார்கள் என்று, இதெல்லாம் உண்மை என்றால் கண்டிப்பாக இதை கண்டிக்க வேண்டும்.

ஆனால், இதையே தங்கள் பாலோவர்ஸ் அதிகமாக்கவும், தங்களை பிரபலப்படுத்தவும் தான் ஒரு சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர், இந்த பப்ளிசிட்டி வியாபாரத்தில் பலியாக இருப்பது விஜய், அஜித் ரசிகர்களே.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!