முத்தத்தால் கோஹ்லி அனுஷ்காவையே திணறடித்த பிக் பாஸ் ஜோடி..!! செம்மையா கலாய்த்த நெட்டிசன்கள்..!!


சல்மான் கான் நடத்திய பிக் பாஸ் 11 போட்டியில் கலந்து கொண்டவர்கள் புனீஷ் சர்மா, பந்தகி கல்ரா. காதல் ஜோடியான அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் மீடியாவின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

நெருக்கமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

பந்தகி தனது கன்னத்தில் முத்தம் கொடுத்தபோது எடுத்த செல்ஃபியை புனீஷ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.


அதை பார்த்த நெட்டிசன்கள் அவர்களை கலாய்க்கத் துவங்கிவிட்டனர்.

அனுஷ்கா தனது கன்னத்தில் முத்தம் கொடுத்தபோது செல்ஃபி எடுத்து வெளியிட்டிருந்தார் விராட் கோஹ்லி. அவர்களை போன்றே புகைப்படம் எடுத்ததால் தான் நெட்டிசன்கள் புனீஷ், பந்தகியை கலாய்த்துள்ளனர்.


கோஹ்லி மாதிரியே அப்படியேவா காப்பியடிப்பீர்கள். வேறு வேலையே இல்லையா புனீஷ் உங்களுக்கு என்று ஆளாளுக்கு அவரை கிண்டல் செய்கிறார்கள்.

நெட்டிசன்கள் பலரும் புனீஷ், பந்தகியை கலாய்த்துக் கொண்டிருக்க அவர்களின் ரசிகர்களோ காப்பியடித்தால் என்ன நல்லா தானே இருக்கிறது என்று பாராட்டியுள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி