பிரபல இசையமைப்பாளர் கூறிய விஸ்வாசம் தீம் குறித்த அதிரடி அப்டேட்..!! தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!


டி.இமான் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவருடைய பாடல்கள் என்றாலே எப்படியும் ஹிட் அடித்துவிடும்.

அதனாலேயே வருடத்திற்கு குறைந்தது 5 படங்களாவது இவர் இசையமைத்துவிடுவார், இவருக்கு ஜாக்பாட் அடித்தது போல் தற்போது தல படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆம், எல்லோருக்குமே தெரியும் விசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் என்று, இப்படத்தின் ஆல்பம் குறித்து இமான் சமீபத்தில் பதில் அளித்துள்ளார்.


இதில் ‘நான் பெரிய நடிகர்கள் படங்களுக்கு இசையமைக்க எப்போதும் விரும்புவேன், விசுவாசம் படமும் அப்படி தான்.

நீண்ட நாட்களாக அஜித் சாருடன் பணியாற்ற காத்திருந்தேன், இது எனக்கு நல்ல வாய்ப்பு, கண்டிப்பாக மாஸ் பாடல்கள் இருக்கும், அதே நேரத்தில் என் ஸ்டைலில் மெலடி பாடல்களும் இருக்கும்.

மேலும், தல படம்னாலே தீம் மியூஸிக் இல்லாமல் இருக்காது, அதேபோல் இதில் தீம் தெறிக்கும்’ என்று கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி