புதிய சேனலுக்கு கை மாறும் தமிழ் பிக் பாஸ் 3 – தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு.!

தென்னிந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடா என பல மொழிகளில் பிரபலமான ஒரே நிகழ்ச்சி பிக் பாஸ்.

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பட்டி தொட்டியெங்கும் இது பேசப்பட்டது.

இதனால் ரசிகர்கள் பலரும் சீசன் 3 எப்போது தொடங்கும்? யார் தொகுத்து வழங்குவார்கள்? என்ற எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான எண்டோமால் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் இரண்டு சீசன்களுடன் விஜய் டிவியுடனான ஒப்பந்தம் முடிந்து விட்டது. தற்போது மூன்றாவது சீசனுக்கான பேச்சு வார்த்தை சேனல்களிடம் நடந்து வருகின்றன என கூறியுள்ளது.

மேலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது சந்தேகமே எனவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.