இறுதிவரை சென்றாலும் யாசிகா ஆனந்த் வெற்றி பெற வாய்ப்பே இல்லை..!! சென்றாயனின் மனைவி அதிர்ச்சி தகவல்..!!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடக்கத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தோடு பலமான போட்டியாளராக பார்க்கப்பட்டவர் யாசிகா ஆனந்த். இவருக்கு ஆர்மிகளும் இணையதளத்தில் ஆரம்பிக்கப்பட்டு இருந்து நிலையில், அவரது முகம் சுளிக்க வைக்கும் சமீபத்திய நடவடிக்கைகள் அவருக்கான ஆதரவை பாதியாக குறைத்து விட்டது.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 2வின் போட்டியாளரனான சென்றாயனின் மனைவி கயல்விழியும், ‘இனி யாசிகா வெற்றி பெற வாய்ப்பு இல்லை’ என வெளிப்படையாகவும் உறுதியாகவும் தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசி இருந்த கயல்விழி, ஆரம்பத்தில் தன் கணவர் சென்றாயனுக்கு போட்டியாக, யாசிகா மற்றும் டேனியலை எண்ணியதாகவும்,

ஆனால் தற்பொழுது ரசிகர்களின் கருத்துக்களை பார்க்கும் போது, யாசிகாவை வெளியேற்றும் முனைப்பில் அவர்கள் இருப்பது தெளிவாக தெரியவந்துள்ளதாகவும், இதனால் அவர் விரைவில் வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.


சென்றாயன் வீட்டில் இப்படியொரு நற்செய்தி தெரியுமா உங்களுக்கு

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன், முதல் சீசனை போல இல்லாவிட்டாலும் ஓரளவு விறுவிறுப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலான போட்டியாளர்கள் முகம் சுளிக்க வைக்கும் விதத்தில் நடந்து கொள்ளும் நிலையில், சென்றாயன், டேனியல் ஆகியோர் கொஞ்சம் தனித்துவப்பட்டு பலமான போட்டியாளர்களாக வளம் வருகின்றனர்.

காமெடி நடிகர் சென்றாயன் பலரது பேவரைட் போட்டியாளராக இருந்து வரும் நிலையில், அவருக்கு காத்திருக்கும் ஒரு இனிய செய்தி குறித்து மனம் திறந்து இருக்கிறார் சென்றாயனின் மனைவி கயல் விழி.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கயல்விழி, தன் கணவர் சென்றாயன் கண்டிப்பாக 100 நாட்கள் இருப்பார் எனவும் அவருக்கு கடினமான போட்டியாளர் என்றால் அது டேனியல் ஆக இருக்கும் எனவும் தெரிவித்து இருந்தார்.

மேலும் தான் கற்பமாக இருப்பதாகவும், 100 நாட்களை கடந்து சென்றாயன் வெளியே வரும் போதுதான் இந்த இனிய செய்தியை அவருக்கு தெரிவிப்பேன் என்றும் குறிப்பிட்டு இருந்த கயல்விழி, இது குறித்து சென்றாயனுக்கு இப்பொழுது தெரிந்து விட்டால் நிச்சயம் உள்ளே இருக்க மாட்டார் என்ற தனது அச்சத்தை பற்றியும் பேசி இருந்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!