புரொஜக்ட் சி-2 – விமர்சனம்

கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற ஸ்ரீ, தகுந்த வேலை கிடைக்காத விரக்தியில் இருக்கிறார். இதனிடையே பக்கவாத நோயால் பாதித்த விஞ்ஞானி ஒருவரின் வீட்டில் வேலைக்கு சேர்கிறார். அந்த வீட்டில் சமையல் செய்ய பணிப் பெண் ஒருவரும் வேலை செய்கிறார். விஞ்ஞானிக்கு பிசியோதெரபி அளிக்க சாம்ஸ் வீட்டுக்கு வருகிறார்.   சில பிரச்சனைகளால் விஞ்ஞானி தனி ஆளாக வசித்து வருகிறார். இதனால் விஞ்ஞானியின் சொத்துக்கும், உயிருக்கும் ஆபத்து வருகிறது. அவருக்கு ஆபத்தை விளைவிக்கும் அந்த நபர்கள் யார்? சதிகாரர்களிடமிருந்து விஞ்ஞானி தப்பினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.  

அப்பாவி இளைஞராக யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார் கதாநாயகன் ஸ்ரீ. வருமையில் வாழும்போது ஒரு நடிப்பையும் ஆடம்பர வாழ்க்கை வாழும்போது ஒரு நடிப்பையும் கொடுத்து பாராட்டை பெறுகிறார். நாயகி வசுதா கிருஷ்ணமூர்த்தி அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கவர்ச்சி, வில்லத்தனம், அதட்டல் பேச்சு என்று பல முகங்கள் காண்பித்து கைத்தட்டல் பெறுகிறார்.   பிஸியோதெரபிஸ்ட்டாக வரும் சாம்ஸ் படத்தின் இடையே பேசும் ‘பஞ்ச்’ வசனங்கள் பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலை எழுகிறது. விஞ்ஞானியாக வரும் ராம்ஜி உடல் பாவனைகளால் அனைவரையும் கவர்கிறார்.

இவரின் நடிப்பு பாராட்டை பெறுகிறது. குறுகிய கதாப்பாத்திரங்கள், கிடைத்த விஷயங்களை வைத்து படமாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் வினோ. ஆனால் படத்தின் ஆரம்ப காட்சிகள் அலுப்பை ஏற்படுத்தும் வகையிலும் பிற்பகுதி சிறிது வேகம் எடுப்பது போன்ற எண்ணம் ஏற்படுகிறது. சில இடங்களில் வரும் சஸ்பென்ஸ் காட்சிகள் விறுவிறுப்பை ஏற்படுத்திகிறது. ஒரு வீட்டினுள் நடக்கும் சம்பவத்தை கிடைக்கும் வெளிச்சத்தை கொண்டு காட்சிகளை படம்பிடித்து காண்பித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சதீஷ் ஆனந்த். இசையமைப்பாளர் சிபு சுகுமாரனின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.   மொத்தத்தில் புரொஜக்ட் சி-2 ரசிக்கலாம்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!