தமிழக அரசு அங்கீகரித்து வழங்கும் விருதினை கேவலமாக நினைக்கிறோமா..? பார்த்திபனின் வைரல் பதிவு..

சென்னை 20-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட்ட இந்த விழாவானது வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இதில் நடிகர் பார்த்திபன் இயக்கிய’இரவின் நிழல்’ திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விருது குறித்து பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “எத்தனை குழந்தைங்க? இத்தனை குழந்தைங்க “no no! பெரிய குழந்தைங்க மட்டும் தான் கணக்கு. சின்னக் குழந்தைங்க,நேத்து பொறந்த குழந்தையெல்லாம் கணக்கில் சேத்துக்க முடியாது” குழந்தைன்னா எல்லாமே குழந்தை தானே?

சட்டையில கூட மேல் பட்டனை மட்டுந்தான் போடுவேன். நடு பட்டனையும் கீழ் பட்டனையும் போடமாட்டேன் என அடம் பிடிப்பவரின் மனநிலை என்னவாக இருக்கக் கூடும்? Chennai international film festival-விருதை நாம் மதிக்கிறோமா? இல்லையா? சென்னையில் பொழப்பை நடத்தி,அதல் வரும் ஃபூவா(Bhuvah)வை தின்று கொழுத்து, தமிழக அரசு அங்கீகரித்து வழங்கும் உதவியில் 20 வருடங்களாக கௌரவமாக நடத்தும் விழாவில் வழங்கும் விருதினை சிறிதென கேவலமாக நினைக்கிறோமா?

Oscars, golden globe,அல்லாத ஆயிரம் international விருது இங்குண்டு! International விருதுகளையும்,inter அல்லாத national விருதுகளையும்,சான்றோர்கள் ஒரு அட்டையில் ஒட்டித்தரும் சான்றிதழ்களையும், ஏன் ரசிகர்களின் கைதட்டல்களையும் கூட… பெற்ற தாயாய், பெற்ற பிள்ளையாய், பெற்ற பெருமையாய் மதிப்பவன் நான்.

ஒவ்வொரு வருடமும் festival படங்களை முடிந்தவரை இம்முறை’Triangle of sadness’அதில் “what u doing?” “Selling shit”என்பான் பேசி கெட்டவன். கேட்டவன் அதிர்ந்து “what?” “Fertilisers”எனச் சிரிப்பான். எதையும் விற்று பிழைக்கலாம்.அதில் எதிர்மறை எண்ணங்களும் அடங்கும்! Negativity-ஐ nativity ஆக கொண்டவர்களுக்கு அதுவே வினையாற்றும்!” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.








  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!