கிடா விருந்து – சினிமா விமர்சனம்


கிராமத்தில் நாயகன் எஸ்.பி.பிரசாத் வேலைக்கு ஏதும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். தன் அம்மாவுடன் வாழ்ந்து வரும் பிரசாத், அவர் மீது மிகவும் பாசத்துடன் இருந்து வருகிறார். சிறு வயதில் நாயகி ஷாலினியுடன் பழகி வருகிறார் பிரசாத். ஷாலினியோ நாளடைவில் ஊரைவிட்டு சென்றுவிடுகிறார்.

ஷாலினியை மறக்க முடியாமல் அவரது பெயரை பச்சை குத்திக் கொண்டு வாழ்ந்து வருகிறார். படிப்பை முடித்து ஊர் திரும்பும் ஷாலினியை காதலிக்கிறார் பிரசாத். ஆனால், காதலை மறுக்கிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஒரு செல்வந்தரின் பிள்ளைகளான 4 பேர் பொறுப்பின்றி சுற்றித் திரிகிறார்கள், இவர்கள் ஒரு சமயத்தில் நிலை தடுமாறுகிறார்கள். அப்போது தங்களைப் பற்றி உணர்கிறார்கள். அதிலிருந்து மீண்டார்களா? நாயகனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம்? நாயகி ஷாலினியை பிரசாத் திருமணம் செய்துக் கொண்டாரா? என்பதே படத்தின் கதை.


படத்தின் நாயகனாக நடித்திருக்கும் எஸ்.பி.பிரசாத் தன்னால் முடிந்தளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சில இடங்களில் இவருடைய நடிப்பு செயற்கை தனமாக உள்ளது. நாயகி ஷாலினி அழகாக வந்து செல்கிறார். கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். ஆனால், பெரியதளவு கைக்கொடுக்கவில்லை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

கஞ்சா கருப்புவின் காமெடி ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ரஞ்சன், கே.பி.என்.மகேஷ்வர், சேரன்ராஜ், தங்கம், தமிழ், மணிமாறன், சையது, சுகி, ராணி, சுமிதா, அர்ச்சனா, திலக், அர்ஜுன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

கிராமத்தில் விருந்து பெயர் பெற்ற ‘கிடா விருந்து’ என்பதை படத்தின் தலைப்பாக வைத்து உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.எஸ்.தமிழ்ச்செல்வன். மண் வாசனை மாறாமல் படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். பல இடங்களில் யதார்த்த மீறல்கள் படத்தில் இடம் பிடித்திருக்கிறது.


திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் கொடுத்திருக்கலாம். சொல்ல வந்த விஷயத்தை கொஞ்சம் தெளிவாக சொல்லியிருந்தால் படத்தை ரசித்திருக்கலாம். இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

பிரின்ஸ் நல்ல தம்பியின் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைத்திருக்கிறது. இவருடைய இசை படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம். பின்னணி இசையையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். வெற்றியின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘கிடா விருந்து’ சுமாரான சாப்பாடு.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!