சூடு – விமர்சனம்

நடிகர் எம் பாண்டியன்
நடிகை சாசனா
இயக்குனர் எஸ் ஆறுமுகசாமி
இசை எஸ் ஆறுமுகசாமி
ஓளிப்பதிவு எஸ் ரமேஷ்
நாயகன் பாண்டியன் திண்டுக்கல்லில் உள்ள கிராமத்தில் தாய், மனைவி, மகனுடன் வாழ்ந்து வருகிறார். விவசாயம் செய்து நல்ல முறையில் பணம் சம்பாதித்து குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார். இந்நிலையில் ஒருவர் இவருடைய குடும்பத்தை அழிக்க முயற்சி செய்கிறார்.

அவர் மூலம் மது போதைக்கு அடிமையாகும் பாண்டியன், மனைவி மற்றும் தொழிலை இழக்கிறார். இறுதியில் பாண்டியன் மது போதையில் இருந்து விடுபட்டு இழந்த சந்தோஷத்தை மீட்டு எடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பாண்டியன், நாயகியாக நடித்திருக்கும் சாசனா ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். புதுமுகங்கள் என்பதால் நடிப்பை அவர்களிடம் எதிர்பார்க்க முடியவில்லை.

மதுபோதைக்கு அடிமையானால் அவர்களின் குடும்பம் எப்படி செல்லும் என்பதை படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆறுமுகசாமி. அடுத்தடுத்த காட்சிகள் சம்பந்தம் இல்லாமலும், திரைக்கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமலும் இருக்கிறது. இது போன்ற கதைகள் பல வந்திருந்தாலும், இப்படம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

ஆறுமுகசாமியின் இசையும் ரமேஷின் ஒளிப்பதிவும் படத்திற்கு வலு சேர்க்கவில்லை.

மொத்தத்தில் ‘சூடு’ தாங்க முடியவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!