ராதே ஷ்யாம் திரைவிமர்சனம்

பாகுபலி படங்களுக்கு பின் பான் இந்தியன் ஸ்டாராகியுள்ள பிரபாஸ் நடிப்பில் இன்று பல மொழிகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ராதே ஷ்யாம். நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும், சத்யராஜ், சச்சின், ஜெயராம், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
UV கிரேஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் எந்தளவிற்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.   

கதைக்களம் 
இந்தியளவில் சக்திவாய்ந்த கைரேகை சோதிடராக திகழ்ந்து வருகிறார் சத்யராஜ், அவரின் சிஷ்யனாகவும் கைரேகை மூலமாக எதிர்காலத்தையே கணிக்கும் விக்ரமாதித்யா கதாபாத்திரத்தில் பிரபாஸ் அறிமுகமாகிறார். சில காரணங்களால் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ள பிரபாஸ் உலகம் சுற்றும் வாலிபனாக இருந்து வருகிறார்.  

காதல், கல்யாணத்தில் விருப்பமில்லாமல் பல பெண்களுடன் சுற்றி வருகிறார் பிரபாஸ், ஆனால் ஒரு நாள் ரயிலில் பூஜா ஹெக்டேவை சந்திக்கும் பிரபாஸ் காதல் வையப்படுகிறார். இத்தாலியில் மருத்துவராக இருந்து வரும் பூஜா ஹெக்டேவை பிரபாஸ் பின்தொடர இருவரும் காதலில் விழுகின்றனர்.

மறுபுறம் தனது எதிர்காலத்தை ஏற்கனவே கணித்துள்ள பிரபாஸ் பூஜா ஹெக்டேவிடம் தான் இருவரும் ஒன்றாக சேரமுடியாது என்ற உண்மையை அவரிடம் கூறுகிறார். பிரபாஸுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பூஜா ஹெக்டே சில திடுக்கிடும் முடிவுகளை எடுக்கிறார்.

இதனால் நிலை தடுமாறும் பிரபாஸ் தனது துள்ளிய கணிப்பை தானே முறியடித்து எப்படி பூஜா ஹெக்டேவுடன் ஒன்றாக சேர்கிறார் என்பதே ராதே ஷ்யாம் படத்தின் மீதி கதை.

படம் பற்றிய அலசல்   
பிரபலமான கைரேகை ஜோதிடராக வரும் விக்ரமாதித்யா கதாபாத்திரத்தில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் பிரபாஸ். படம் முழுக்க நடிகை பூஜாவுடன் காதல் காட்சிகளை அள்ளி தெளித்துள்ளார். ஆனால் படத்தில் சில ஆக்ஷன் மற்றும் முக்கிய காட்சிகளில் அவரின் முகம் CGI செய்யப்பட்டது அப்பட்டமாக தெரிகிறது.  

மருத்துவராகவும் உயிர்கொல்லி நோய்யாலும் பாதிக்கப்படுள்ள Prerana என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே காதல் காட்சிகள் மட்டுமின்றி எமோஷனல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார். மேலும் மற்ற கதாபாத்திரங்களில் வரும் சத்யராஜ், சச்சின், ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பு ஓகே. பின் வில்லன் போல ஓப்பனிங் கொடுக்கப்பட்டு படத்தில் அவர் என் வந்தார் என கேட்கும் படி இந்த படத்திலும் நடித்துள்ளார் ஜெகபதி பாபு.  

ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள் சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை, S.S.தமனின் பின்னணி ஓகே. மனோஜ் பரஹம்சாவின் ஒளிப்பதிவில் பல காட்சிகள் தரமாக இருந்தது. மேலும் 1976-ல் நடக்கும் இப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் செட் மற்றும் பிசுறுத்தட்டும் CGI தான். இதனால் இப்படத்தின் உண்மைத்தன்மையை உணரமுடியவில்லை.

இயக்குனர் ராதா கிருஷ்ணா குமாரின் திரைக்கதையில் விறுவிறுப்பு குறைவாகவே உள்ளது. இதனால் படத்தின் மீதான ஈடுபாடு சுத்தமாக இல்லை. படத்தின் முதல் பாதி காதல் காட்சிகளை வைத்து எழுத்துள்ளனர், ஆனால் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பை கூட்ட முயற்சி செய்ததோடு கிளைமாக்ஸ் சுனாமி காட்சிகளில் அசத்தியுள்ளனர்.   

க்ளாப்ஸ்
படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பிரமாண்ட மேக்கிங்
கிளைமாக்ஸ் காட்சி
பிரபாஸ் மற்றும் பூஜாவின் நடிப்பு  

பல்ப்ஸ்
படத்தின் முதல் பாதி செம ஸ்லொவ்
பிசுறுத்தட்டும் CGI காட்சிகள்  
(மொத்தத்தில் ராதே ஷ்யாம் திரைப்படம் அனைவரிடமும் ஏற்படுத்திய பெரிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது என்று தான் கூறவேண்டும்.)   
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!