கார்த்தியின் ‘சர்தார்’ படத்தை கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்

தற்போது தியேட்டர்களுக்கு இணையாக ஓடிடி தளங்களில் படம் ரிலீஸ் ஆகும் படங்கள் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. ஓடிடியில் படம் பார்க்கும் ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து இருக்கிறது.

இந்நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்த் ‘ஆஹா’ என்ற ஓடிடி தளத்தை தொடங்கி இருக்கிறார். தமிழில் இந்த தளத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. அதில் கார்த்தியின் சர்தார் பட காட்சியும் திரையிடப்பட்டது.

சர்தார் படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா நிறுவனம் தான் வாங்கி இருக்கிறது. தியேட்டர்களில் இந்த படம் வெளிவந்த பிறகு தான் ஓடிடியில் சர்தார் வெளிவர இருக்கிறது.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!