: சினிமாவுக்கு என்ன ஆச்சு? ஜெயில், கைதி, லாக்கப் டைட்டில் ஏன்?

தற்போது வரும் படங்களின் டைட்டில் எல்லாம் சமூகத்துடன் தொடர்புடையதாகவே இருக்கிறது.

அண்மையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் கைதி. ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தில் கார்த்திக்கு ஜோடி கிடையாது. மாறாக 10 வருடம் சிறையில் கழித்து பின்னர் விடுதலையான கார்த்தி தனது மகளை பார்க்க வருகிறார்.

வெளியில் வந்த அவர் போலீசுக்கு உதவ சென்ற இடத்தில் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை தாண்டி மகளை சந்தித்தாரா? இல்லையா? போலீசுக்கு உதவியதற்கு பலன கிடைத்ததா இல்லையா என்பது போன்ற பல கேள்விகளுக்கு த்ரில்லராக பதிலளிக்கும் வகையில் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், ராதிகா சரத்குமார், அபர்ணதி, பாபி சிம்ஹா, யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயில். ஆக்‌ஷன் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படம் இந்த வருடம் இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கைதி, ஜெயிலைத் தொடர்ந்து தற்போது நிதின் சத்யா தயாரிப்பில் வைபவ் மற்றும் வாணி போஜன் ஆகியோர் முன்னணி ரோலில் நடிக்கும் புதிய படத்திற்கு லாக்கப் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வைபவ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும், வெங்கட் பிரபு, ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் திருடன் போலீஸ், மிக மிக அவசரம் ஆகிய படங்கள் போலீஸ் கதையை மையப்படுத்தி வெளியாகியுள்ளன. தற்போது வரும் படங்களுக்கு பெரும்பாலும் காவல்துறையை மையப்படுத்தி டைட்டில் வைக்கப்படுகிறது. கைதி, ஜெயில், லாக்கப் என்று டைட்டில் வைத்துள்ளனர் படக்குழுவினர். தமிழ் சினிமாவில் மட்டும் இது போன்று விதவிதமான டைட்டிலில் படம் வெளியாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!