பிக்பாஸ் 3-யில் சரவணன் மீனாட்சி பிரபலம்! யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் 3 நாளை இரவு ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் போட்டியாளர்களைப் பற்றிய தகவல் தான் எதுவுமே இல்லாமல் இருந்தது.

ஆனால் ஜாங்கிரி மதுமிதா உறுதியாக தெரிந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் சரவணன் மீனாட்சி புகழ் கவீன் மற்றும் நடன இயக்குனர் சாண்டி கலந்து கொண்டிருப்பது உறுதியாகிவிட்டது.

இந்த தகவல் வெளிவந்தவுடன் கவீனுக்கு பெண் ரசிகர்கள் அதிகம் என்பதால், ஐ எம் வெயிட்டிங் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் கவீன் நடிப்பில் வெளியான நட்புனா என்னானு தெரியுமா படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.