கர்ப்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை… முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்

தமிழ் சீரியல்களில் பிரபலமான நடிகைகளில் சந்தோஷியும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மரகதவீணை என்ற சீரியல் மூலம் இல்லறப் பெண்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

சுமார் 3 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிய அந்த சீரியலுக்கு முக்கிய காரணமே இவர் தான், இதற்கு முன் இவர் கலைஞர் டிவியில் சூரியபுத்திரி, இளவரசி மற்றும் அண்ணி போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.

ஆனால் சமீபகாலமாக இவரை சீரியல் பக்கமே பார்க்க முடியவில்லை, அதற்கு காரணம் இவர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் அவர் அது தொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளியிடாமல் இருந்தார்.

இதையடுத்து தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.