கார்த்தி படத்தை வேண்டாம் என்று கூறிய நடிகை நயன்தாரா.. காரணம் இதுதானா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்ததாக கோல்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதை தொடர்ந்து கனெக்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை நயன்தாரா தனது திரை வாழ்க்கையில் சில முக்கிய சூப்பர்ஹிட் திரைப்படங்களை தவறவிட்டுள்ளார்.

அப்படி அவர் தவறவிட்ட படங்களில் ஒன்று தான் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா. லிங்குசாமி இயக்கிய இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், தமன்னா நடித்திருந்த கதாநாயகியாக கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிப்பதாக இருந்தது நயன்தாரா தானாம். ஆனால், சம்பள விவகாரம் காரணமாக நயன்தாராவிற்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போவதாக அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!