தெறி படத்தில் விஜய்யின் செயலை பார்த்து பல தடவை பயந்துள்ள எமிஜாக்சன்! வெளிவந்த உண்மை

விஜய் நடித்து அட்லீ இயக்கியிருந்த படம் தெறி. இவர்கள் கூட்டணியில் முதலாவதாக உருவான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருந்தனர்.

இதில் எமி ஜாக்சனுக்கு நடன காட்சிகளில் நடனம் சரியாக வரவில்லையாம். டான்ஸ் மாஸ்டரும் எவ்வளவோ சொல்லி கொடுத்து பார்த்தார். ஆனால் அங்கு தளபதி ஸ்டைலாக ஆடி கொண்டிருந்தார். அவரும் அவர் பங்கிற்கு சில ஆலோசனைகளை எமிக்கு வழங்கினாராம்.

பிறகு ஒரு காட்சிக்காக விஜய் எமிக்கு முன்பே லடாக்கிற்கு சென்றுவிட்டார். அப்போது எமி பயங்கரமாக டான்ஸ் ஆடியுள்ளார். அப்போது தான் தெரிந்தது, இவ்வளவு நாளாக விஜய்யை பார்த்து தான் பயந்துள்ளார் என்று, அவரிடம் கேட்டதற்கும், ஆமாம் அவ்வளவு பெரிய டான்ஸரை(விஜய்) பக்கத்தில் வைத்து கொண்டு பதட்டமில்லாமல் ஆட முடியவில்லை என்றாராம்.

இதை எல்லாம் அப்படத்தின் டான்ஸ் மாஸ்டர்களுள் ஒருவராக இருந்த ஷெரீப் தற்போது கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.