விஜய், கமல், ரஜினி என அனைவரையும் வென்ற அஜித்-சிவா காம்போ- பிரமாண்ட சாதனை

தமிழ் சினிமாவில் ஒரு சில காம்போ சொல்லி அடிக்கும். அந்த வகையில் அஜித்-சிவா காம்போ ரசிகர்களால் மிகவும் வரவேற்பு பெற்றது.

விவேகம் தோல்வியால் சிவாவை பலரும் கிண்டல் செய்ய, அத்தனை பேர் எண்ணத்தையும் விஸ்வாசத்தில் தூள் தூளாக்கியது இந்த கூட்டணி.

விஸ்வாசம் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்துள்ளது, அதிலும் தமிழகத்தில் ரஜினி படத்தை விட அதிக வசூலை கொடுத்துள்ளது.

இது மட்டுமின்றி இதே கூட்டணியில் வெளிவந்த வேதாளம், கமலின் தூங்கவனத்தை வீழ்த்தியது.

மேலும், வீரம் விஜய் நடித்த ஜில்லாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது, இப்படி 3 முறை போட்டி போட்டு வெற்றிக்கொடுத்துள்ளது இந்த காம்போ.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.