தொடர்ச்சியான சினிமா ஸ்ட்ரைக்கால் எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா..? கவலையில் உரிமையாளர்கள்..!!


கடந்த 12 நாட்களாக நடந்து வரும் சினிமா ஸ்ட்ரைக் காரணமாக தமிழ் சினிமா துறைக்கு ரூ 250 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சேவைக் கட்டண விவகாரத்தில் டிஜிட்டல் சேவை வழங்கும் க்யூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் பெரும் மோதல் எழுந்துள்ளது.

இதனால் கடந்த மார்ச் 1-ம் தேதியிலிருந்து புதிய பட வெளியீடுகளை முற்றிலும் நிறுத்தி ஸ்ட்ரைக்கை அறிவித்தது தயாரிப்பாளர் சங்கம். நீங்க மட்டும்தான் ஸ்ட்ரைக் பண்ணுவீங்களா… எங்களுக்கும் பிரச்சினை இருக்கு… நாங்களும் ஸ்ட்ரைக் பண்ணுகிறோம், என தியேட்டர்காரர்கள் அறிவித்தனர்.

அடுத்து, வரும் மார்ச் 16-ம் தேதியிலிருந்து ஷூட்டிங்குகளையே ரத்து செய்வதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.


இதன்படி ஒட்டுமொத்த சினிமா துறையே முடங்கப் போகிறது. ஸ்ட்ரைக் இயங்காது, படப்பிடிப்பு நடக்காது, போஸ்ட் புரொடக்ஷன் கிடையாது, பிரஸ் மீட், ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகள் கூட இனி இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இதனால் பெரும் நஷ்டத்தை திரைப்படத்துறை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ 250 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. ஒரு புதிய படம், அதுவும் சுமாரான பட்ஜெட் படம் ரிலீஸ் ஆனால் கூட ரூ 25 கோடி வரை புரளும் சினிமாவில். ஆனால் இப்போது இரண்டு வாரங்களாக அடியோடு பட வெளியீடு நின்றுவிட்டது. ஏற்கெனவே ரிலீசான படங்களைப் பார்க்கவும போதிய ஆட்கள் இல்லை. கடந்த 2 வாரங்களில் மட்டும் ரூ 250 கோடி வரை வருவாய் இழப்பை திரைத்துறை சந்தித்துள்ளது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி