காலா படம் வெற்றிக்கு காரணம் யார் தெரியுமா..? ரகசியத்தை அம்பலப்படுத்திய படக்குழுவினர்..!!


ரஜினியின் காலா படத்திற்கு மக்களிடையே ஏன் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது என்பதற்கான சில காரணங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் இன்று ரிலீசாகியுள்ளது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் காலா படத்தை பார்க்கத் தூண்டும் சில காரணங்கள்…

1. ரஜினி படம்:

வேறு எந்தக் காரணமுமே தேவையில்லை, ரஜினிக்காகவே இப்படத்தை அவரது ரசிகர்கள் நிச்சயமாகப் பார்ப்பார்கள். அந்தளவிற்கு ரஜினி படங்களுக்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர்.


2. ரஞ்சித் – ரஜினி கூட்டணி:

கபாலி படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் – ரஜினி கூட்டணியில் வெளிவந்துள்ள படம். கபாலி படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே, இப்படத்திற்கு மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

3. தனுஷ் தயாரிப்பு:

தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தொடர்ந்து நல்ல தரமான படங்களைத் தயாரித்து வருகிறார் நடிகர் தனுஷ். அந்தவகையில், காலா படத்தை தனுஷ் தயாரித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

4. அரசியல் எதிர்பார்ப்பு:

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பிறகு ரிலீசாகும் படம் என்பதால், அவரது ரசிகர்கள் படத்தை ஆர்வமுடம் எதிர்பார்த்திருக்கின்றனர். அதிலும் காலா படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் இது அரசியல் படமல்ல, ஆனால் படத்தில் அரசியல் இருக்கிறது எனப் பேசி இந்த எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளார் ரஜினி.


5. எதிர்ப்புகள்:

ரஜினியின் காவிரி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் காலாவிற்கு தடை விதிக்கப்பட்டது, பின்னர் நீதிமன்றம் மூலம் பாதுகாப்பு வாங்கியது, நிஜக்காலாவின் மகன் படக்குழு மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய காலா இன்று ரிலீசாகியுள்ளது. ஏன் இப்படத்திற்கு இத்தனை தடைகள், அப்படி படத்தில் என்ன இருக்கிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

6. சக நடிகர்கள்

காலா படத்தில் ரஜினி மட்டுமின்றி, நானா படேகர், ஈஸ்வரிராவ், சமுத்திரக்கனி, ஹூமா குரேஷி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. பொதுவாக ரஞ்சித் படங்களில் எல்லாக் கதாபாத்திரங்களுக்குமே சிறப்பு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும். அப்படியாக இப்படத்தில் இவர்கள் என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

7. சந்தோஷ் நாராயணன் இசை

ரஞ்சித்தின் ஆஸ்த்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவரது இசையில் கபாலி படத்தின் பாடல்கள் அனைத்துமே செம ஹிட். அதேபோல தான், காலா படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே சந்தோஷ் நாராயணனின் இசைக்காகவே படம் பார்க்க செல்வோரின் எண்ணிக்கையும் அதிகம்.


8. தாராவி செட்

காலா படம் மும்மை தாராவி பகுதியில் வாழும் தமிழர்களை பற்றியது. ஆனால் அங்கு சென்று முழுக்க முழுக்க படப்பிடிப்பு நடத்த முடியாத காரணத்தால், சென்னை பூவிருந்தவல்லி அருகே பல நூறு ஏக்கரில் தாராவி போன்றே செட் போட்டு, படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதற்காக கலை இயக்குனர் ராமலிங்கம் தலைமையில் தினமும் 800க்கு அதிகமானவர்கள் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மும்மை தாராவியை சென்னைக்கு அழைத்து வந்த காரணத்தால், படத்தை பார்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

9. சென்சார்

பொதுவாக ரஜினி படங்கள் எல்லாமே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் இருக்கும். அதனாலேயே ரஜினி படங்களுக்கு ‘யு’ சான்றிதழ் தான் கிடைக்கும். ஆனால் இந்த படத்துக்கு சென்சார் போர்டு, ‘யு/எ’ சான்று வழங்கியுள்ளது. 1991ம் வெளியான தளபதி படத்திற்கு பிறகு, அதாவது 27 ஆண்டுகள் கழித்து ரஜினி படத்துக்கு ‘யு/எ’ சான்று வழங்கப்பட்டுள்ளதால், படம் தளபதி அளவுக்கு இருக்கமா என எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.

10. கேங்க்ஸ்டர் கதை

ரஜினியின் வெற்றி படங்களில் கேங்க்ஸ்டர் படங்கள் குறிப்பிடத்தகுந்தவை. பில்லா, தளபதி, பாட்ஷா, கபாலி என குறிப்பிடத்தகுந்த கேங்க்ஸ்டர் படங்களில் அவர் நடித்துள்ளார். காலாவும் கேங்க்ஸ்டர் படம் என்பதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!