நடிகர் மகேஷ் பாபுவிற்கு இப்படியொரு ரசிகையா..? வியக்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்..!!


ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்தவர் ரிலாங்கி சத்யவதி (106) இவரைதான் தெலுங்கு திரை நட்சத்திரம் மகேஷ் பாபு சந்தித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

“என்னுடைய தலைமுறையல்லாமல், மூத்த தலைமுறையைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து வருகிற அன்பை பார்க்கும்போது மிகவும் அற்புதமாக உள்ளது.

என்னுடைய ரசிகர்களின் அதீத அன்பை கண்டு வியந்துள்ளேன். ஆனால் 106 வயதுடைய ரிலாங்கி சத்யவதி அவர்கள் என்னை ஆசிர்வதிப்பதற்காக ராஜ்முந்திரியில் இருந்து இவ்வளவு தூரம் வந்திருப்பது என் மனதை தொட்டுவிட்டது.

அவரை மகிழ்வித்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன். உண்மையில் அவரை விட நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். இந்த அன்பினால் மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆசிர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன்” என அவர் பதிவிட்டிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.