நடிகை அமலாபால் – விஷ்ணு விஷால் மறுமணம்..? வைரல் தகவலால் அதிர்ச்சி..!!


இயக்குனர் ஏ.எல் விஜயை விவாகரத்து செய்த பின்னர் நடிகை அமலாபால் பல படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது “ஆடை, அதோ அந்த பறவை போல” உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார்.

அதே போல் அண்மையில் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ரஜினி என்ற பெண்ணை நடிகர் விஷ்ணு விஷால் திருமணம் செய்தார். இதையடுத்து, இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில், நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.


மறுமணம் :
இந்நிலையில் ‘ராட்சசன்’ படத்தில் விஷ்ணு விஷால் – அமலாபால் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் விஷ்ணு விஷால் – அமலாபால் இருவரும் முதல் திருமண விவாகரத்து பெற்றுள்ள நிலையில், இவர்கள் மறுமணம் செய்ய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.