விஜய் 63 அப்டேட் : நயன்தாராவின் முதல் காட்சி என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய் 63 படத்தை அட்லீ இயக்க AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் நயன்தாரா தான் நாயகியாக நடிக்கிறார். இவர் சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அது குறித்த அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.

இதனையடுத்து தற்போது இந்த படத்தின் முதல் காட்சி குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம் முதல் முதலாக இந்த படத்திற்காக நயன்தாரா திருமண காட்சியில் நடித்துள்ளார்.

அதுவும் ஒரு சர்ச்சில் தான் படமாக்கியுள்ளனர். அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடித்த போதும் நயன்தாராவிற்கு சர்ச்சில் திருமணம் நடைபெறுவது தான் முதல் காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.