‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் திரைக்கு வர இருக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு..!!


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாறு படத்தை மிஷ்கினின் உதவியாளர் ஆ.பிரியதர்ஷன் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘தி அயர்ன் லேடி’ என்ற தலைப்பை வைத்து அதை உறுதி செய்துள்ளனர்.

அத்துடன் தற்போது தலைப்புடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. போஸ்டரில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன், ஜெயலலிதா குறித்து கூறிய வாசகமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரம்மாண்ட படத்தை பேப்பர்டேல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இந்த படத்தின் ஆரம்பவிழா மிக பிரமாண்டமாக விரைவில் சென்னையில் நடைபெறவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்