எனக்கு பக்க பலமாக இருந்து ஆதரிக்கிறீர்கள்.. தனுஷ் நெகிழ்ச்சி..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான தனுஷின் பயணம் கோலிவுட்டில் ஆரம்பித்து ஹாலிவுட் வரை தொடர்கிறது. நடிப்பைத் தாண்டி இயக்கம், எழுத்து, பாடகர் என பல பரிமாணங்களில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். இவர் தனது நாற்பதாவது பிறந்த நாளை (28-07-2022) கொண்டாடினார். இவரின் பிறந்த நாளுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர்.


இந்நிலையில், நடிகர் தனுஷ் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது எங்கிருந்து தொடங்கியது என்று எனக்குத் தெரியவில்லை. எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நலன் விரும்பிகள், திரைப் பிரபலங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ரசிகர்களுக்கும் அவர்களின் அளவற்ற அன்புக்கும் நன்றி. கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர்கள் எனக்குப் பக்க பலமாக ஒரு தூணாக இருந்து என்னை ஆதரிக்கின்றனர். நீங்கள் காட்டும் அன்பால் நெகிழ்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!