பிரபல சீரியல் நடிகை ஆல்யா மானசாவிற்கு இப்படியொரு நிலைமையா..? அதிர்ச்சி தகவல்..!!


தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி. இதில் ஜோடியாக நடிக்கும் சஞ்சீவ்-ஆல்யாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

அதிலும் ஆல்யா மானசா எப்போதும் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருப்பார். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு குறும்பட நடிக்க அது செம ஹிட்டாகியுள்ளது. அண்மையில் ஒரு பேட்டியில் ஆல்யா மானசாவிடம் பட வாய்ப்புகள் வருகிறதா, என்னென்ன படங்கள் கமிட்டாகியுள்ளனர் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், சினிமா வாய்ப்புகள் வருகிறது, ஆனால் நான் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன், அப்படி ஒரு ஆசை இல்லை. முதலில் 3 படங்கள் நடித்தேன், அதில் ஒன்று மட்டும் வெளியானது சரியாக ஓடவில்லை. என்னுடைய உயரத்தால் தான் எனக்கு ரீச் கிடைக்கவில்லையோ என்று எனக்கு தோன்றியது.

அதனால் திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் என்றிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் சீரியல், விளம்பரங்கள் என்று எல்லாம் நடிப்பாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!