அம்மாடியோவ்.. சர்கார் பட கொண்டாட்டம் ஆரம்பம்..!! பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்’. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துவங்கியிருக்கும் நிலையில், படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வருகிற 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக படநிறுவனம் அறிவித்துள்ளது.

படத்தின் முதல் சிங்கிள் அல்லது டீசர் குறித்த அறிவிப்பு அன்று வெளியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!