2வது திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்..!!


நடிகர் பவன் கல்யாணுக்கும், ரேணுக்கும் பல வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு காலகட்டத்தில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்நிலையில் பவன் கல்யாணை விவாகரத்து செய்த பிறகு ரேணு தேசாய் தனது மகள், மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் தான் அவர் தனக்கு பிடித்த ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.


இந்நிலையில் பவன் கல்யாணின் ரசிகர்கள் ரேணுவிற்கு மறுமணம் செய்யக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்களாம்.

ஆனால் பவன் கல்யாண் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போகும் ரேணுவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!