‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் காப்பியா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!!


சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார்.

கார்த்திக், ரம்யாகிருஷ்ணன், செந்தில் உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் வெளியானதுமே, இப்படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் காப்பி எனக் கூறப்பட்டது.

சமூக வலைதளங்களில் பலரும் இந்தப் படம் ‘ஸ்பெஷல் 26’ படத்தின் அப்பட்டமான காப்பி எனக் கூறி வருகிறார்கள். ‘ஸ்பெஷல் 26’ கதையை இப்போது பார்க்கலாம். பிறகு, காப்பியா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்…

பாலிவுட்டில் நீரஜ் பாண்டே இயக்கிய படம் ‘ஸ்பெஷல் 26’. இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், அனுபம் கெர், மனோஜ் பாஜ்பாயி, ஜிம்மி ஷெர்கில் ஆகியோர் நடித்திருப்பார்கள். 2013-ல் வெளிவந்து வசூலைக் குவித்த இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைத் தனது நேர்த்தியான திரைக்கதையால் ரசிக்கவைத்திருப்பார் நீரஜ் பாண்டே.


1987-ம் வருடத்தில் 26 பேர் கொண்ட குழுவினர் சி.பி.ஐ அதிகாரிகளைப் போல நடித்து மும்பையில் இருக்கும் பிரபல நகைக்கடை ஒன்றில் கொள்ளை அடித்தனர். பல லட்சம் மதிப்பிலான நகை, பணம் ஆகியவை கொள்ளை போயின. அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தச் சம்பவம் தான் ‘ஸ்பெஷல் 26’ படமாக உருவானது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

சி.பி.ஐ செலக்‌ஷன் இன்டர்வியூவில் தோல்வியடைந்த மகா புத்திசாலியான அக்‌ஷய் குமார், இன்னும் மூவருடன் இணைந்து டிப்டாப்பாக உடை அணிந்து, அரசியல்வாதிகள், தொழிலதிபர்களிடம் தோரனையாகப் பொய்யாகப் பேசி, சி.பி.ஐ, வருமான வரித்துறை அதிகாரிகளைப் போல நம்பவைத்து அசால்ட்டாக கொள்ளை அடிக்கிறார்கள். இதில் அக்‌ஷய் குமாரின் கூட்டாளியாக அனுபம் கெரும் நடித்திருப்பார்.

தானா சேர்ந்த கூட்டம் கதை அப்பட்டமாக ‘ஸ்பெஷல் 26’ படத்தின் காப்பி போல உள்ளது. போலீஸ் ஆக ட்ரை பண்றீங்களோ எனக் கேட்பதற்கு, சூர்யா, ‘போலீஸ்லாம் நிறைய பார்த்தாச்சு சார்… நம்ம இப்போ அப்டியே வேற ட்ராக்கு…’ எனச் சொல்கிறார். தங்கள் கிரிமினல் நடவடிக்கைகளைத்தான் இப்படி பொடி வைத்துச் சொல்கிறார் சூர்யா.


சி.பி.ஐ வேலைக்கு ஆள் எடுப்பதற்காக இன்டர்வியூ நடத்துகிறார்கள் சூர்யா குழுவினர். இன்டர்வியூவுக்கு வந்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கே தெரியாமல் ஒரு கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்துகிறார்கள். இதே கதைதான் ‘ஸ்பெஷல் 26’ படத்திலும் இடம்பெறும். ஆனால், நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களை இந்த டீசரில் காட்டவில்லை.

இந்தி ‘ஸ்பெஷல் 26’ படத்தில் அக்‌ஷய் குமாரின் கூட்டாளியான அனுபம் கெர் செருமுவதைக் கூட அப்படியே இங்கே சூர்யாவுடன் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் செருமுவதாகக் காட்டியிருக்கிறார்கள். எனவே, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் ‘ஸ்பெஷல் 26’ படத்தின் அப்பட்டமான காப்பி எனக் கூறப்படுகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!