தளபதி பற்றி யாருக்கும் தெரியாத சுவாரஸ்யமான 10 தகவல்கள்..!!


1.1992ஆம் ஆண்டு தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய தளபதி தனது முதல் படமான நாளைய தீர்ப்பில் இருந்து தோல்வியையே சந்தித்து வந்தார். 1996ஆம் ஆண்டு வந்த பூவே உனக்காக படம் தான் அவருக்கு முதல் ஹிட் கொடுத்தது. அதன் பின்னர் எல்லாம் வரலாறு பேசியது.

2. தளபதி தான் LKG படிக்கும் போது தனக்கு கொடுக்கும் பாக்கெட் மனியை வைத்து தன்னுடன் படிக்கும் நண்பர்களுக்கும், தந்து வகுப்பு சகாக்களும் பேனா மற்றும் பென்சில் ஆகிய தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பாராம்.

3.தளபதி மொத்தம் 3 திருமண மண்டபங்கள் சொந்தமாக வைத்துள்ளார். இதில் முதல் 10 திருமணங்கள் இலவசமாக செய்துள்ளார்.

4.விஜய்க்கு ஹோட்டல் சரவணபவன் உணவு மிகவும் பிடிக்குமாம், சூட்டிங் தவிற வீட்டில் இருக்கும் நேரத்தில் தினம் எப்படியாவது ஒரு முறையாவது சரவணபவன் சென்று சாப்பிட்டுவிடுவாராம்.


5.தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகரான விஜக்கு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் தாமாக முன்வந்து அவருக்கு (DOCTORATE) முனைவர் பட்டம் அளித்தது. மேலும், 1998லேயே தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார் இந்த ஒப்பற்ற கலைஞர்.

6. தளபதி தனக்கு 9 வயதாக இருக்கும் போது தனது 2 வயது தங்கை வித்யாவை இழந்துவிட்டார். ஒவ்வொரு வருடமும் சூட்டிங் இருந்தால் கூட ரத்து செய்துவிட்டு தனது தங்கைக்காக ஒருநாள் ஓதுக்கி அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவாராம் இந்த பாசக்கார அண்ணன்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

7.தனது நண்பர் தல அஜித் நடித்த மங்காத்தா படத்தின் சூட்டிங் பின்னி மில்ஸில் நடந்து கொண்டிருந்த போது அந்த செட் பக்கத்தில் தான் தளபதியின் வேலாயுதம் பட சூட்டிங் நடந்து வந்தது. இதனை தெரிந்துகொண்ட தல அஜித், வேலாயுதம் படக்குக்குவினருக்கு பிரியாணி செய்து பரிமாறினார். மனம் நெகிழ்ந்த விஜய் தனது நண்பர் அஜித்திற்கு ஒரு வாட்ச் ப்ரசென்ட செய்தார். இந்த வாட்சினை தளபதி கொடுத்த நியாபகமாக அடுத்த பல படங்களில் கட்டி நடிர்த்திருந்தார் தல.

8. தனது துவக்க காலத்தில் இருந்து படங்களில் பாடல்களை பாடி வரும் விஜய் சச்சின் படத்தில் பாடிய வாடி வாடி பாடலுக்கு பிறகு 7 வருடம் கழித்து பாடிய கூகிள் கூகிள் பாடல் அவரது ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை கொடுத்தது.


9.சங்கர் இயக்கிய மெகா ஹிட் படம் முதல்வன் படத்தில் நடிக்க முதலில் விஜய்யிடம் தான் பேசப்பட்டது. சரியான தேதி இல்லாததால் பின்னர் அர்ஜூன் கைக்கு சென்று அந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு மிகச்சிறந்த படமாக மாறியது.

10ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளை ஸ்டார் ஹோட்டல் மற்றும் பார்ட்டி செய்து கொண்டாடாமல் ஏழைகளுக்கு உதவி செய்வதிலும் மக்களுக்கு நன்மை செய்வதிலும் கழிப்பார் தளபதி.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!