பிக்பாஸ் சீசன்-2வின் ஹாட் டாபிக் என்ன தெரியுமா..? பாருங்க அசந்துருவீங்க..!!


நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 2 தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள பிரபலங்கள் யார்? யார்..? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில், இவர் பங்கேற்ப்பார், அவர் பங்கேற்ப்பார் என பல தரப்பட்ட தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருகின்றன. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்து கொள்ளவுள்ள சில பிரபலங்களின் விபரங்கள் நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளன.

வில்லங்கமான போட்டியாளர்களான தாடி பாலாஜியும், அவரது மனைவியும் கலந்து கொள்வது தான் இப்போதையை ஹாட் டாபிக்.


இருவரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒன்று சேருவார்களா..? அல்லது, இன்னும் சண்டை போட்டுக்கொள்வார்களா..? என்பது தான்.

மேலும், நடிகர் பவர் ஸ்டார், எங்க வீடு மாப்பிள்ளை அபர்ணதி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில், மேலும் இரண்டு போட்டியாளர்கள் உறுதி செய்யபட்டுள்ளனர். அதன்படி, பிரபல நடிகை ஜனனி ஐயர் மற்றும் வாணி ராணி சீரியலில் நடத்துக்கொண்டிருக்கும் மமதி சாரி அகியோர் போட்டியாளர்களாக வீட்டுக்குள் நுழையவுள்ளார்கள்.

அதிலும், பவர் ஸ்டார் சீனிவாசனின் ரசிகர்களை குஷியாக்கும் என கூறுகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!