பணத்திற்காக மட்டும்தான் கமல் இதை செய்கின்றாரா..? ஸ்ரீபிரியா அதிரடி கேள்வி..!!


கமல்ஹாசன் எப்போதும் தனது வேலையில் சரியாக இருப்பார், அவர் சிறந்த தலைவர் என்பதால் அவரது கட்சியில் இணைந்தேன் என நடிகர் ஸ்ரீபிரியா கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, கமல் எப்பவும் வேலையில சரியா இருப்பார். அரசியல் கட்சி நடத்த பணம் இல்லைனுதான், கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிறாரா? என்று ஒருவர் என்னிடம் கேட்டார். அதனால என்ன, மக்கள் சொத்துல கட்சி ஆரம்பிக்கலையே, யாரையும் ஏமாத்திச் சம்பாதிக்கலையே, வேலை பார்த்துதானே சம்பாதிக்கிறார் என்று பதில் சொன்னேன்.

கமல்ஹாசனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், கூட்டத்துல நின்னுக்கிட்டு குரல் கொடுக்கிறதைவிட, முன்னாடி போய் பேசுவோம்னு தோன்றியது, மேலும் கமலின் கொள்கைகள் எனக்கு பிடித்திருந்ததால், அவரது கட்சியில் இணைந்தேன் என கூறியுள்ளார்.

மேலும், ரஜினி எனக்கு நல்ல நண்பர்தான், அரசியல் என்று வந்துவிட்டால் எனது தேர்வு எப்போதும் கமல்தான் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!