பிக்பாஸ் வீட்டில் கட்டிப்பிடி வைத்தியம் பார்க்க களம் இறங்கும் கவர்ச்சி நடிகை..!!


கடந்த ஆண்டு, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மக்களிடையே மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. நடிகர் கமல் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஜூன் 17 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில், இந்த முறை யாரெல்லாம் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் என பார்வையாளர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.


ஒரு சிலர் இதில் பங்கேற்பார்கள் என கூறப்படும் நிலையில், உறுதியான தகவல்கள் இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை.

இதனிடையே, தமிழில் முன்னணி கவர்ச்சி நடிகையாக திகழ்ந்த மும்தாஜ் இந்த சீசனில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சீசனிலேயே மும்தாஜ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அதில் அவர் பங்கேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!