தளபதி 65 படத்தின் முழு பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. சன் பிக்சர்ஸ் எடுத்த அதிரடி முடிவு

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த படம் சர்கார்.

இப்படத்திற்கு பின் இந்த பிரமாண்ட கூட்டணி மீண்டும் தற்போது தளபதி 65 படத்திற்காக இணைந்துள்ளது.

ஆம் லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்து வெளிவர காத்திருக்கும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் மீண்டும் 4ஆம் முறையாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

மேலும் இந்த படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்க போகிறது என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது இந்த தகவல் ஏறக்குறைய 100% சதவீதம் உறுதியாகி உள்ளது. ஆம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தான் தளபதி விஜய் தனது 65வது படத்தை நடிக்க இருக்கிறார்.

மேலும் இன்று தான் அதற்கான அக்ரிமெண்ட் போடபட்டு விஜய் ஓப்பதம் செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தின் முழு பட்ஜெட் மதிப்பு மட்டுமே ரு.130 கோடி. அதில் தளபதி விஜய்யின் சம்பளம் மட்டுமே ரு. 70 கோடி.

மேலும் இப்படத்திற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வாங்கியுள்ள சம்பளம் ரு. 10 கோடி. கொரானா தாக்கம் முழுமையாக குறைந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!