மறைந்த நடிகைகளின் மர்மமான மரணங்கள்..!! விடை தெரியாத வினாக்களின் பின்னணி என்ன..?


தமிழகத்தில் உள்ள சினிமா நடிகைகளில் பலரின் மரணம் மர்மத்தின் முடிச்சுகளுடன் தான் முடிந்துள்ளது. இன்று வரை அந்த முடிச்சு அவிழ்க்கப் படவில்லை, என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில், அளவுக்கு அதிகமாகக் குடித்து விட்டு, நிதானம் இழந்த நடிகை ஸ்ரீதேவி, பாத் டப்பில் மூழ்கி இறந்தார், என்று துபாயின் அரசு அறிக்கை அளித்திருந்தது. இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற ஸ்ரீதேவியின் மரணம் துபாய் மண்ணிலேயே இன்றும் புதைந்து கிடக்கிறது.

இவா் மட்டுமல்ல. சற்று பின்னோக்கிப் பார்த்தோமானால், தமிழ் சினிமா நடிகைகளில் பலருடைய மரணம் மர்மமான முறையிலேயே நிகழ்ந்திருக்கிறது. இதற்கான உண்மையான காரணம் இது வரை வெளியே வந்ததில்லை என்பது தான் அதிர்ச்சியான செய்தி.


குடும்ப பாங்கான நடிகை என்றும், நம்ம வீட்டுப் பெண் என்றும் சொல்லப்பட்ட நடிகை சோபா தற்கொலை செய்து கொண்டார். அவர் பாலு மகேந்திராவுடன் ரகசிய வாழ்க்கை நடத்தினார். பின் என்ன நடந்ததென்று தெரியவில்லை. ஒரு நாள் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இதற்கான விடை, பாலு மகேந்திராவிடமிருந்தும் கிடைக்கவில்லை.

தமிழ் சினிமாவின் தலை சிறந்த கவர்ச்சிக் கன்னி, என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட சில்க் ஸ்மிதா, சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருந்தார். தன் கண்களாலேயே போதையை ஊட்டிய சில்க் ஸ்மிதாவின் சொந்த வாழ்க்கை சுகமாக இல்லை. ஒரு தாடிக்காருடன் மட்டும் சுற்றிக் கொண்டிருந்தார். இவரும், மன உளைச்சலில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.


இவரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை இன்று வரை அறிய முடியவில்லை. அது அவருடனேயே புதைக்கப்பட்டு விட்டது. இதே போல, ரஜினியின் தங்கையாகவும், முள்ளும் மலரும் படத்தில், அவருக்கு ஜோடியாகவும் நடித்த படாபட் ஜெயலட்சுமியும், தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணமும் தெரியவில்லை.

நடிகை விஜி, காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார், என்று சொல்லப் பட்டது. அதன் பின்னணி பற்றி இன்று வரை எந்த செய்தியும் இல்லை.


சிம்ரனின் தங்கை நடிகை மோனலும், காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் வெளியாகின.

இப்படி நடிகைகளின் மரணங்கள் மர்மமாகவே இருக்கின்றன, அவர்களின் செரந்த வாழ்க்கையைப் போல. இந்தப் புரியாத புதிர்களுக்க எப்போது விடை கிடைக்கும்?

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி