நடிகர் சங்கத் தலைவருக்கு இப்படியொரு நிலைமையா..? வைத்தியசாலையில் சிகிச்சை..!!


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான நடிகர் விஷால் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தாலும், அரசியலில் கால்பதிக்க நினைத்து முடியாமல் போய்விட்டது. தற்போது மீண்டும் தீவிர அரசியலில் களமிறங்குவதற்கான ஆலோசனையில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இவர் தற்போது சண்டக்கோழி 2 படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவருக்கு அண்மையில் உடல் நல குறைவு ஏற்படத்தால் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.


அதன்பின், வெளிநாட்டில் சிகிச்சை பெறுகிறார் என்றும் கூறப்பட்டது மேலும், சிலர் கேரளாவில் சிகிச்சை பெறுகிறார் என்று கூறினார்கள்.

ஆனால், இந்த அனைத்து வதந்திகளுக்கு தற்போது விஷால் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அவரது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு ஒன்றும் பெரிதாக இல்லை என்றும், நீண்ட காலமாக இருந்து வந்த ஒற்றை தலைவலி காரணமாக தான் தற்போது சிகிச்சை பெற்று வருகிறாராம். இன்னும் ஒரு வாரத்தில் குணமடைந்து விடுவார் என்றும் தெரிவித்துள்ளார் விஷால்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி