ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் சினிமா பிரபலங்கள்..!! ஆழ்ந்த துயரத்தில் திரையுலகம்..!!


தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. 50 வயதை இவர் கடந்த போதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடுவது போல் அழகில் மிளிர்ந்தவர். இரவது மரணம் ஒட்டு மொத்த திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


தமிழ் மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், கதாநாயகியாகவும் அறிமுகமான இவர் பாலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற்ற நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.


இவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்கனவே கோலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்களான ரஜினிகாந்த், கமல் நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் அங்கு சென்ற நிலையில், தற்போது பாலிவுட் பிரபலங்கள் பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி