புதுச்சேரியில் அமலா பால் செய்த அதிர்ச்சி செயல்..!! வியப்பில் ரசிகர்கள்..!!


நடிகை அமலா பால், புதுச்சேரியில் சொகுசு கார் பதிவு செய்ததன் மூலம் 20 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதே சொகுசு காரில் புதுச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு சென்றுள்ளார். அமலா பாலின் சொகுசு காரை புதுச்சேரி மக்கள் ஆச்சரியமாக பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விழாவில் அமலா பால் தன்னுடைய கண்களை தானமாக வழங்குவதாகக் கையொப்பமிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.


நடிகை அமலா பால் ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொகுசு கார் வாங்கி, அதனை போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் பதிவு செய்ததன் மூலம் 20 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவர் மீது கேரள மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சமீபத்தில் விசாரணைக்கு ஆஜராகி சரணடைந்த அமலா பாலை கைது செய்த போலீசார், கேரள உயர்நீதிமன்றம் அளித்த முன்ஜாமீனை அடிப்படையாகக் கொண்டு ஒரு சில மணி நேரத்தில் சொந்த ஜாமீனில் அவரை விடுவித்தனர். அமலாபால் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அதே சொகுசு காரில் புதுச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு சென்றுள்ளார் அமலா பால். வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே அவர் அதே காரில் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமலாபாலின் சொகுசுக்காரை புதுச்சேரி மக்கள் ஆச்சரியமாக பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விழாவில் அமலாபால் தன்னுடைய கண்களை தானமாக வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கண்தானம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமலாபால் கூறியதாவது ‘உலக அளவில் இந்தியாவில் தான் கண்பார்வை அற்றவர்கள் அதிகம் என்ற தகவல் அதிச்சியளிக்கின்றது. கண்தானம் விழிப்புணர்வை மக்களிடம் அதிகம் ஏற்படுத்த வேண்டும்.’ என்று கூறியுள்ளார்.

புதுச்சேரியில் கார் பதிவு செய்த விவகாரம் பற்றிக் கேட்டதற்கு, ‘அந்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் இதுகுறித்து கருத்து கூற முடியாது’ எனத் தெரிவித்துள்ளார் அமலாபால்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி