ஸ்ரீதேவி முதல் கணவரை விவாகரத்து செய்ய என்ன காரணம் தெரியுமா..? பின்னணியில் அதிர்ச்சி தகவல்..!!


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில் மிகபெரிய பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தமிழகத்தில் உள்ள சிவகாசி மாவட்டத்தில் 1963 ஆம் ஆண்டு பிறந்த இவர். 1967 ஆம் ஆண்டு துணைவன் திரைப்படம் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து, பல படங்கள் நடித்த இவர், ரஜினி, கமல் போன்ற உச்சநட்சத்திரங்களுடன் 80-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

அவற்றில் 16 வயதினிலே மற்றும் மூன்றாம் பிறை போன்ற படங்கள் மிகவும் முக்கியமானவை. பிறகு மிதுன் சக்ரபொர்த்தி என்ற பிரபல நடிகரை ரகசிய திருமணம் செய்தார். பின்னர் இவர்கள் மீடியாவுக்கும் தெரிவித்தனர்.


இது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. சிறிது காலம் கழித்து, அவர் முதல் மனைவியை மீண்டும் திருமணம் செய்துக்கொண்டார். அதனால் பிரிந்த ஸ்ரீதேவி, படங்களில் நடித்து வந்தார். பிறகு பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தில் நடித்தார்.

போனி கபூர் முன்பே திருமணமாகி அந்த மனைவியுடன் ஒரு மகள் மற்றும் மகன் இருந்தார்கள். அந்த நிலையிலும், ஸ்ரீ தேவியின் மீது உள்ள காதலால், முதல் மனைவியை 1996 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு அதே ஆண்டு ஸ்ரீ தேவியை திருமணம் செய்துகொண்டார். பிறகு இவர்கள் இருவருக்கும் ஜான்வி மற்றும் குஷி என இரு பெண்குழந்தைகள் பிறந்தார்கள். இன்றும் போனி கபூரிற்கு ஸ்ரீதேவி மீது அளவிலாத அன்பு இருக்கிறது என்பது உண்மை தான்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி