படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய விஜய் வசந்த்..!! என்ன ஆனார் தெரியுமா..?


நடிகர் விஜய் வசந்த், ‘சென்னை 28’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதையடுத்து இவர் ‘சரோஜா’, ‘கனிமொழி’, ‘மங்காத்தா’, ‘பிரியாணி’, ‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’, ‘வேலைக்காரன்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது அவர் ‘மை டியர் லிசா’ படத்தில் நடித்து வருகிறார் விஜய் வசந்த். இந்தப் படத்தை ராஜன் கிருஷ்ண தேவன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை போருஸ் சினிமா, சாந்தினி சினிமாஆகியவை இணைந்து தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் விஜய் வசந்துடன் லீஸ்சா, சுவாமிநாதன், மயில்சாமி உட்பட பலர் நடிக்கின்றனர்.இந்தப் படத்தின் படப்படிப்புகள் கடந்த சில நாட்களாக ஊட்டியில் உள்ள ஒரு பங்களாவில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிளைமாக்ஸ் சண்டைகாட்சி படமானபோது விஜய் வசந்த் குழியில் தவறி விழுந்ததில் அவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. படக்குழுவினர் சென்னை திரும்பி விட்டனர்.விஜய் வசந்த் சென்னை கொண்டுவரப்பட்டு இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அவரது கால் எலும்பு முறிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!