அவளை பார்க்க பார்க்க பிரஷர்தான் ஏறுகிறது.. மஹத்திடம் புலம்பும் தாடி பாலாஜி..!!


பிக்பாஸ் வீட்டில் சுவாரசியம் தருவது தற்போது நித்யா- பாலாஜி இருவரின் செயல்கள்தான். இதனால்தானோ என்னவோ இன்று நேரடியாக பிக் பாஸே நித்யாவை வீட்டின் தலைவியாக நிர்ணயத்திருக்கிறார்.

இதை கேட்ட பல போட்டியாளர்கள் தங்கள் அதிர்ச்சியை வெளிக்காட்டினர், பாலாஜியோ பேரதிர்ச்சி ஆகியிருக்கிறார்.

இவ்வளவு காலமாக அதாவது ஒரு வார காலமாக பாலாஜி பொறுமையாக இருப்பதாக காட்டி கொண்டார். மற்றவரிடம் நித்யாவை பற்றி திட்டி வந்தார், இவரின் பேச்சு நேர்மையாக பேசுவது போலத்தான் இருந்தது. கோபத்தில் நியாயம் இருப்பது போலத்தான் தெரிந்தது.

ஆனால் இன்றைய பிக் பாசில் பாலாஜி நித்யாவை நேரடியாக திட்டிய காட்சிகள் வெளியாகியுள்ளன. கமல் நேற்று நித்யாவை பிக் பாசில் இணைந்ததால் நீங்களும் செலிபிரிட்டி தான் என்று ஊக்கப்படுத்தினார்.

அதனை மனதில் வைத்து கொண்ட பாலாஜி இன்று மனைவி நித்யாவை கடந்து செல்லும்போது 67 கமெராக்கள் தாண்டி நடித்து கொண்டிருக்கிறாய் என்று முணுமுணுத்தார்.

அதன் பின் செலிபிரிட்டியாம் செலிபிரிட்டி செருப்பை கழட்டி அடிக்கணும் என்று கிண்டல் செய்கிறார். அவளை பார்க்க பார்க்க பிரஷர் ஏறுகிறது என்கிறார் மஹத்திடம்.

என்னதான் மனைவி என்றாலும் மற்றவர் முன்னிலையில் அவள் இவள் என்று அவமானப்படுத்தி தனது தனிப்பட்ட வெறுப்பை மற்றவர்களிடம் திணிப்பது சரியா என்று பாலாஜியிடம்தான் கேட்க வேண்டும்.

இதனால் இவ்வளவு நாளாக பாலாஜி காட்டாத இன்னொரு முகம் தற்போது தெரிய தொடங்கி இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!