சமத்து நடிகையை தொடர்ந்து SK-யுடன் இணைந்த அதிரடி ஹீரோயின்..!! அவங்க யாருனு தெரியுமா..?


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சீமராஜா என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியானது. மேலும், விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதில் நடிகை சமந்தா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் முடிந்துவிடும். இதனை தொடர்ந்து, சயின்ஸ் ஃபிக்ஷன் அடிப்பையில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார்.


இந்த படத்தில் நடிகை ரகுல் பரீத் சிங் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை நயன்தாரா, சமந்தா ஆகியோரை தொடர்ந்து ரகுல் பரீத் சிங் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

சீமராஜா படம் ரிலீசாகும் முன்னரே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்றும், ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் அநேகமாக படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!