அட.. களவாணி-2 படத்திற்கு இப்படியொரு நிலைமையா..? சிக்கலில் சிக்கிய தயாரிப்பாளர்..!!


ஏ. சற்குணம் இயக்கத்தில், நசீரின் ஷெராலி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விமல், ஓவியா ஆகியோரது நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான படம் களவாணி.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்குனர் சற்குணம் தானே தயாரிக்க முடிவு செய்து, சமீபத்தில் ‘கே 2’ என்று டைட்டில் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் சிவகார்த்திகேயனை வைத்து வெளியிட்டார். இப்படத்திலும் விமலும், ஓவியாவும் நடிக்கயிருக்கின்றனர்.

இதற்கிடையில், இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், களவாணி 2 படத்தை தாங்களே தயாரிக்கப் போவதாக ஷெராலி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், களவாணி 2 படத்திற்கான டைட்டில் உரிமையை ஷெராலி நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி