அம்மாவுக்காக இப்படியொரு கணவரா..? வாரிசு நடிகையால் அசந்துபோன ரசிகர்கள்..!!


80 மற்றும் 90களில் கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவி புகழின் உச்சியில் இருக்குபோதே பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இப்போதும் அவ்வப்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள சில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ஸ்ரீதேவி மாம் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் தமிழிலும் வெளிவந்து உள்ளது.

இந்த படத்தில் ஸ்ரீதேவியின் கணவராக நடித்து இருப்பவர் அத்வின் சித்திக்.


இவரை இந்த படத்தில் நடிக்க தேர்ந்தெடுத்ததே ஸ்ரீதேவியின் மகள் ஜான்விதானாம்.

இவருக்கு ஏஞ்சலினா ஜோலியுடன் அத்வின் சித்திக் நடித்த மைத் இன் ஹார்ட் படம் பிடிக்குமாம். அதில் அத்வின் சித்திக்கின் நடிப்பு மிகவும் பிடிக்குமாம்.

எனவே மாம் படத்தில் ஸ்ரீதேவியின் கணவராக இவர் நன்றாக இருக்கும் என கருதி இருக்கிறார். அதன்படி அத்வின் சித்திக் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி