நடிக்க வருவதற்கு முன் நம்ம நடிகர்கள் என்ன வேலை செய்தார்கள் தெரியுமா..?


சினிமா பிரபலங்கள் அனைவரும் திரைத்துறை குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் கிடையாது.

பல நடிகர்கள் ஒரு வேளை சோற்றுக்கு கூட வழி இல்லாமல் வாழ்ந்து பின்னர் தங்களுக்கான இடத்தை சினிமாவில் பிடித்தவர்களும் இருக்கிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

சினிமாவிற்குள் வருவதற்கு முன்னர் நடிகர் நடிகைகள் என்னென்ன வேலைகள் செய்து கொண்டிருந்தனர் என்பதை பற்றி இந்த பகுதில் பார்க்கலாம் வாங்க..

அஜித் :

இவர் சினிமா துறைக்குள் வருவதற்கு முன்னர் மெக்கானிக்காக இருந்தவர் என்று பலர் கூறி வந்தாலும், இவர் டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்தார் என்பதே உண்மை.


அரவிந்த் சாமி :

சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அரவிந்த் சாமி சில காலம் தனது சொந்த கம்பெனியில் ட்ரெய்னிங் மற்றும் டெவலப்மெண்ட் வேலையை செய்து வந்தார். இவர் ஒரு தொழிலதிபர் ஆவார்.

நமீதா :

சினிமாவிற்குள் வருவதற்கு முன்னர் ஒரு மாடலாக இருந்த இவர் பள்ளி குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் வேலையை செய்து வந்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

நயன்தாரா :


நடிகை நயன்தாரா சினிமாவிற்க்கு வருவதற்கு முன்னர் ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை செய்து வந்தார்.

சமந்தா :

நடிகை சமந்தா கல்யாண வீடுகளில் ரிசெப்ஷனில் நிற்கும் பெண்ணாகவும் வேலை செய்து வந்தார்.

விஜய் சேதுபதி :

சினிமாவிற்குள் வருவதற்கு முன்னர் துபாயில் கணக்காளராக வேலை செய்து வந்தார் இந்த மக்கள் செல்வன்.

விஷ்ணு விஷால் :

இவர் சினிமா துறையில் வருவதற்கு முன்னர் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக விளையாட பயிற்சி பெற்று வந்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!