ஸ்ரீதேவியின் இறப்பு சான்றிதழ்களில் உள்ள வேறுபாடுகள்..!! மரணத்தின் மர்மம்தான் என்ன..?


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில் மிகபெரிய பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. ஒரு திருமணத்திற்காக கணவருடன் பிப்ரவரி 24 ஆம் தேதி துபாய் சென்றார் அங்கு இரவு 11.30 மணியளவில் திடீரென உயிரிழந்துள்ளார் என அவருடைய உறவினர் சஞ்சய் செய்திகள் வெளியிட்டார். ஸ்ரீ தேவி அவர்களது உடல் பிரேத சோதனைக்கு பிறகு, அவர் இறந்ததற்கான உண்மை தகவல் வெளியாகியுள்ளது.

குளியலறையில் உள்ள தொட்டியின் நீரில் மது போதையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியானது. நேற்று முன் தினம் காலை அவரது உடல் இந்தியா வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், தாமதமாகி நேற்று இரவு இந்தியா வந்துசேர்ந்தது.


இந்த நிலையில், இன்று போனி கபூரின் தம்பி வீட்டில் காலை 9.30 முதல் 12.30 மணி வரை, பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரின் உடல் வைக்கப்படுகிறது. பின்னர், இன்று மாலை 3.30 மணிக்கு மும்பை வில்லிபார்லியில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்ரீ தேவி இறப்பு சம்மந்தமாக வெளியான அனைத்து சான்றிதழ்களிலும் ஏதோ சில தவறுகள் இருக்கிறது. முதலில் வெளியான பிரேத பரிசோதனை சான்றிதழில் ஸ்ரீ தேவியின் பெயர் SREEDEVI BONEY KAPOOR AYYAPPAN என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது அது எழுத்துப்பிழை ஆகும். ஸ்ரீதேவியின் சரியான உச்சரிப்பு SRIDEVI BONEY KAPOOR AYYAPPAN தான். மேலும், இவரின் இறப்பு சான்றிதழ்களில் இவருக்கு 53 வயது என்று குறிப்பிட்டிருக்கிறது, அதுவும் தவறு இவருக்கு 54 வயதாகும்.


அதைத்தொடர்ந்து, ஸ்ரீதேவியின் Embalming சான்றிதழில் 52 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு துபாய் அரசு கொடுத்த அனைத்து சான்றிதழிலிலும் முரண்பட்ட தகவல் இருப்பது ஏன். பிரபலத்தின் இறப்பிலேயே இவ்வளவு அலர்சியம் என்றால், சாமான்ய மக்களின் இறப்பில் என்ன என்ன நடிக்கிறதோ? மேலும், ஸ்ரீதேவியின் அந்த சோதனைகளை எவ்வளவு அலர்சியமாக கையாண்டிருப்பார்களோ தெரியவில்லை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி