உலக நாயகன் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா..? ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சே..!!


தீவிர அரசியலில் களம் இறங்க உள்ளார் நடிகர் கமல்ஹாசன். இவர் இந்த மாதம் 21ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார்.

அதே நேரம் தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவிலேயே மூதலீடு செய்யும் நடிகராவார்.

இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இவரது சொத்து மதிப்பு சுமார் 18 மில்லியன் டாலராகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ 140 கோடியாகும்.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கமல் சினிமாவில் நடிக்க சராசரியாக ரூ 40 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார். 30 கோடி வரை முதலீடு செய்துள்ளார்.


இன்னோவா, ஆடி, ஹம்மர், லிமோயூசினி போன்ற ஆடம்பர கார்களை வைத்துள்ளார். ஆண்டுக்கு 6 கோடி வரை வருமான வரி செலுத்தி வருகிறார். சென்னை ஆழ்வார் பேட்டையில் ரூ 30 கோடி மதிப்பிலான சொந்த வீடு உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ 15 முதல் 18 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார்.

இவரது மகள்களான ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் சினிமாவில் நடித்து வருகிறார்கள். இவர்களும் சினிமாவில் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி